வீடுகளுக்கான ஆன் கிரிட் சோலார் சிஸ்டத்தை எவ்வாறு நிறுவுவது?

1kW, 2kW, 3kW, 4kW, 5kW, 8kW அல்லது 10kW என்பது, அனுமதிக்கப்படும் மின்சக்தி லோடாக இருக்கிறது.  எனினும், லக்னோ, பாட்னா, கொல்கத்தா, சென்னை, மும்பை, நாக்பூர், பெங்களூரு, டெல்லி என்சிஆர், சண்டிகர், ஜெய்ப்பூர், புனே போன்ற முதல் அடுக்கு அல்லது இரண்டாவது அடுக்கு நகரங்களில் ஏர்கண்டிஷனர்களைப் பயன்படுத்துகின்ற மின்நுகர்வோர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சக்தி லோடு, 3kW -லிருந்து 5kW வரை இருக்கிறது. அவர்களது மின் உபயோக கட்டணம் ஒரு மாதத்திற்கு ஏறக்குறைய ரூ.5000 முதல் 10,000 வரை இருக்கிறது.  ஒரு ஆண்டிற்கு ரூ. 1,00,000 முதல் 1,50,000 வரை இக்கட்டணம் இருக்கக்கூடும். தங்களது மின்சாரக் கட்டணத் தொகையைக் குறைப்பதற்கு ஒரு மாற்று வழிமுறையாக சூரியஒளியின் மூலம் பெறப்படும் மின்சக்தி தீர்வினை பயன்படுத்தி பலனடைய அவர்களுள் பலரும் விரும்புகின்றனர்.  வீட்டில் அல்லது தொழில் அமைவிடத்தில் ஆன் கிரிட் சோலார் சிஸ்டத்தை எப்படி என்பதற்கான  வழிகாட்டல் கையேடு இதோ! எனவே, ஒவ்வொரு படிநிலையாக விளக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் ஏட்டை வாசிப்போமா?

படிநிலை 1: சாத்தியக்கூறு அறிக்கை

how to install on grid solar system

மின் கட்டமைப்பு மீது (கிரிட்) சோலார் மின் உற்பத்தி அமைப்பை நிறுவுவதற்கு மாநிலத்தின் DISCOM (மின்வாரியம்) அமைப்பிடமிருந்து நாம் ஒப்புதல் பெறுவது அவசியம்.  TNEB, DHVNN, NBDCL போன்ற 95+ DISCOM நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன.  வீடுகளின் மேற்கூரை மீது சோலார் சாதனங்களை நிறுவுவதை எளிதாக்க தேசிய அளவிலான ஒரு இணையவாசலை (போர்ட்டல்) இந்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.  7-10 நாட்கள் என்ற காலஅளவுக்குள் சோலார் சாதன அமைப்பை நிறுவ விரும்பும் நுகர்வோர், அதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை எளிதாகப் பெறமுடியும். இதற்கான செயல்முறையில் நுகர்வோர்கள் அவர்களது மின்கட்டண ரசீது, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஆதார் அட்டை மற்றும் அவசியப்படும் வேறுசில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

படிநிலை 2: சோலார் சாதனத்திற்கான விலைப்புள்ளியைப் பெறுவது

மின்சார வாரியத்துறையிடமிருந்து சோலார் சாதனத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை நீங்கள் பெற்றதற்குப் பிறகு லூம் சோலார் அல்லது DISCOM நிறுவனங்களின் ஒப்புதல் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து சோலார் சாதனத்திற்கான விலைப்புள்ளியை நீங்கள் பெறவேண்டும்.  அதில், சோலார் பேனல்கள், ஆன் கிரிட் இன்வெர்ட்டர், பேனல் ஸ்டாண்டு போன்ற BoS (சிஸ்டமை சமநிலைப்படுத்துவது), DC வயர், DCDB, ACDB, எர்த்திங் செய்வதற்கான தொகுப்பு, லைட்னிங் அரெஸ்டர் (மின்னல் தாக்குதல் தடுப்பான்) மற்றும் சாதனத்தை நிறுவுவதற்கான சில துணைப்பொருட்கள் போன்ற சோலார் சாதனத்தில் இடம்பெறுகின்ற பொருட்களுக்கான விலை மற்றும் மொத்தக் கட்டணத்தை நீங்கள் காண்பீர்கள்.  கட்டிடத்தின் மேற்கூரை மீது அமைக்கப்படும் சோலார் சாதனத்திற்கு தேவைப்படுகின்ற தொடக்கநிலை முதலீடு தொகை பற்றியும் நீங்கள் அறிவீர்கள். 1kW திறன் கொண்ட ஆன் கிரிட் சோலார் சாதனத்தின் சராசரி விலையானது அதற்கான பொருட்கள், டெலிவரி மற்றும் நிறுவல் கட்டணம் உட்பட ரூ.60,000 முதல் 80,000 என்பதாக இருக்கிறது.  அதைப்போலவே, 3kW திறன் கொண்ட ஆன் கிரிட் சோலார் சாதனத்தின் சராசரி விலை ரூ. 1,80,000 முதல் 2,40,000 – க்கு இடைப்பட்டதாகவும் மற்றும் 5kW சாதனத்தின் விலை ரூ. 3,00,000 முதல் 4,00,000 என்பதாக இருக்கிறது.   

படிநிலை 3: சோலார் சாதனத்திற்கான கடன்

வீடு, கார், மொபைல் மற்றும் பிற பொருட்களை எளிதான சமமாத தவணை திட்டத்தில் (இஎம்ஐ) வாங்குவதைப் போல மேற்கூரை சோலார் சாதனத்தை நிறுவ பல நுகர்வோர்கள் விரும்புகின்றனர்.  இப்போது சோலார் சாதனத்தை நிறுவுவதற்கான கடனைப் பெறுவது எளிதாக்கப்பட்டிருக்கிறது.  மிகக்குறைவான ஆவணங்களுக்கான அவசியத்துடன் 5 ஆண்டுகள் வரை கடனை திருப்பிச் செலுத்தும் கால அளவுடன் குறைவான வட்டி விகிதத்தில்  சோலார் சாதனத்திற்கான கடனை லோன் சோலார் வழங்குகிறது.  3 முதல் 7 நாட்களுக்குள் சோலார் சாதன கடன்தொகை என்ன என்பதை நீங்கள் அறியலாம் மற்றும் அக்கடனுக்கான ஒப்புதல் கடிதத்தையும் நீங்கள் பெறமுடியும்.  அதன்பேரில்,  சோலார் சாதனத்தை நிறுவுவதற்கான மொத்த செலவுத்தொகையில் 20% முதல் 30% வரை முன்பணத்தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். Know more:https://www.loomsolar.com/collections/on-grid-solar-system

படிநிலை 4: சோலார் சாதனத்தை நிறுவுதல்

சோலார் சாதனத்தை வழங்கும் நிறுவனத்திற்கு இப்பணத்தொகை கிடைத்தவுடன் நிறுவப்படும் அமைவிடத்திற்கு சோலார் சாதன பொருட்களை அந்நிறுவனம் அனுப்பி வைக்கும்.

படிநிலை 5: நெட் மீட்டரிங்

மேற்கூரை மீது சோலார் சாதனம் நிறுவப்பட்டவுடன், மின் உபயோகத்தை கணக்கிடுவதற்கான நெட் மீட்டரிங்கை நிறுவும் நடவடிக்கை தொடங்கப்படும்.  இம்போர்ட், எக்ஸ்போர்ட் மற்றும் நிகர பில்லிங் விருப்பத்தேர்வு ஆகிய அம்சங்களை கொண்ட புதிய மீட்டர், ஏற்கனவே இருந்து வரும் மீட்டருக்குப் பதிலாகப் பொருத்தப்படும். இந்த மீட்டரை நிறுவும் பணியை மின்வாரியத் துறை மேற்கொள்ளும். Know more: https://loan.loomsolar.com/

படிநிலை 6: பில் சரிகட்டல்

நெட் மீட்டர் நிறுவப்பட்டதற்குப் பிறகு, 2-3 மாதங்கள் கழித்து புதிய மின் கட்டண பில் தயாரிக்கப்படும்.  உங்களது புதிய மின்கட்டண பில்லில் மின்சக்தி துறையிடமிருந்து நீங்கள் பெற்ற மின்சாரம் (இம்போர்ட்) மற்றும் நீங்கள் மின்சக்தி துறைக்கு வழங்கிய மின்சாரம் (எக்ஸ்போர்ட்) மற்றும் நிகர பில்தொகை  = ஏற்றுமதி – இறக்குமதி (நீங்கள் செலுத்த வேண்டிய அல்லது பெறவேண்டிய பில்தொகை)

முடிவுரை

ஆன் கிரிட் சோலார் சாதனம் நிறுவப்படும் நடவடிக்கையை எளிதாக்க இந்தியாவெங்கும் வீடுகளில், வர்த்தக அமைவிடங்களில் மற்றும் தொழிலகங்களில் சோலார் சாதனம் நிறுவப்படுவதற்காக அமைவிட ஆய்வு சேவையை லூம் சோலார் வழங்குகிறது.  loom solar.com என்ற இணைதளத்திற்கு சென்று பொறியியலாளர் வருகைக்கு முன்பதிவை நீங்கள் செய்ய வேண்டும்.  இந்த முன்பதிவிற்குப் பிறகு எமது பொறியியலாளர், சோலார் சாதனம் நிறுவப்படும் உங்களது அமைவிடத்திற்கு நேரில் வருகை தந்து உங்களது தேவைகள் என்ன என்பதை சரியாகப் புரிந்துகொள்வார். உங்களது தேவைகளின் அடிப்படையில் சிறப்பான சோலார் தீர்வுகளை மிதமான, சரியான கட்டணத்தில் லூம் சோலார் உங்களுக்காகவே வழங்குகிறது.

Leave a comment

सबसे ज्यादा बिकने वाले उत्पाद

Engineer VisitEngineer Visit
Loom Solar Engineer Visit
Sale priceRs. 1,000 Regular priceRs. 2,000
Reviews
डीलर पंजीकरणLoom Solar Dealer Registration
Loom Solar डीलर पंजीकरण
Sale priceRs. 1,000 Regular priceRs. 5,000
Reviews